By April 10, 20210 CommentsReport

பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வனிதா! அவரே வெளியிட்ட பதிவு.. குவியும் வாழ்த்து

பிரபல பிக்பாஸ் நடிகையான வனிதா விஜயகுமார் பாலிவுட் ரீமேக் படமான அந்தாதுன் படத்தை தமிழில் அந்தகன் என்ற படத்தில் நடிகர் பிரசாந்துடன் நடிக்கிறார்.

 

மேலும், இப்படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர் பிரசாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.

 

இந்த படத்தில் வனிதா, சமுத்திரக்கனி, மனோ பாலா, பிரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர்.

 

இதனையடுத்து, இதன் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில், நடிகை வனிதா அந்தகன் படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவலை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அந்த பதிவில் அவர் அந்தகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சமுத்திரகனியின் மனைவி கதாபாத்திரத்தில் தான் நடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*