By April 10, 20210 CommentsReport

அம்மாவுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரோஜா சீரியல் நாயகி… கொள்ளை அழகு புகைப்படத்தை நீங்களே பாருங்க

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலின் நாயகி பிரியங்கா தனது தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

சிபு சூரியன், பிரியங்கா நல்காரி ஆகியோர் நடித்துவரும் இந்த சீரியலில் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசியும் முக்கிய கதாபாத்திரமான பாட்டி ரோலில் நடித்து வருகின்றனார்.

 

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ள இந்த சீரியலே பிரபல ரிவி டிஆர்பி முக்கிய இடத்திற்கு வருவதற்கு காரணம்.

 

இதில் எதார்த்தமான நடிப்பில் அசத்தி வரும் நாயகி பிரியங்காவிற்கு ஏராளான ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், சமூகவலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாகவே இருந்து வருகின்றார்.

 

திரைத்துறைக்கு வரும் முன்பு தனது குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்த பிரியங்கா நல்காரி தற்போது தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த, இவர் ரோஜா சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

 

மேலும ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது மேலும் பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது.


Post a Comment

CAPTCHA
Refresh

*