By April 10, 20210 CommentsReport

சமூகத்தில் புரை ஓடிப்போன சாதிய பேயை விரட்டுகிறதா கர்ணன்?

தனுஷின் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை விட மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கர்ணன்.

 

பரியேறும் பெருமாள் எனும் எதார்த்தமான படைப்பை தந்துவிட்டு, தற்போது கர்ணன் எனும் படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

 

சில எதிர்ப்புகள், பல எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியாகியுள்ள கர்ணன், ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு நீதியை வழங்கினாரா? இல்லையா? என்று பார்ப்போம்.

 

கர்ணன் { தனுஷ் } கைது செய்து அடித்து உதைத்து ரத்தம் சொட்ட சொட்ட காவல் துறையினர்கள் அழைத்து செல்கின்றனர். அங்கே துவங்கும் ‘கண்டா வரச்சொல்லுங்க பாடல் ‘ அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

 

அந்த இடத்தில் முடித்து சில வருடங்கள் படம் பின்னோக்கி செல்கிறது. அங்கே, பொடியன்குளம் எனும் குக்கிராமத்தில் தனது மக்களுடன் வாழ்ந்து வருகிறான் கர்ணன். கர்ணனின் துணை நிற்பவராக லால் மற்றும் அவரது 6 நண்பர்கள்.

 

பொடியன்குளம் ஊரில் தொடர்ந்து 8 வருடமாக யாராலும் நிகழ்த்தமுடியாத விஷயத்தை கர்ணன் முடிக்கிறான். அதனால், ஊர் வழக்கப்படி கர்ணனுக்கு வாள் கொடுத்து கொண்டாடுகின்றனர்.

 

என்னதான் ஊர் மக்கள் சொந்தோசமாக ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் தங்களது ஊருக்கு அரசால் கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் கிடைக்கவிடாமல் மேல் சாதி காரர்கள் தடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்று வருத்தமும் இருக்கிறது.

 

அதில் ஒன்றாக கர்ணனின் பொடியன்குளம் ஊர் வழியாக செல்லும் ஒரு பேருந்து கூட பொடியம்குளம் அருகே நிற்பதில்லை.

 

அது ஏன் என்று கேட்டால், உங்களின் ஊருக்கு பேருந்து நிறுத்தம் இல்லை என்று கூறி நிரகிரிகின்றனர் பேருந்து ஓட்டுனர்கள்.

 

இதற்காக பல வழியில் போராடுகிறார்கள் பொடியன்குளம் மக்கள். ஆனால் குனிந்து கெஞ்சினாள் உரிமை கிடைக்காது, நிமிர்ந்து தைரியமாக போராடுவோம் என்று தனது மக்களுக்காகவும், தங்களது உரிமைக்காகவும் போராடுகிறார் கர்ணன்.

 

ஒட்டுமொத்தமாக இந்த போராட்டத்தில், பல தடைகளையும், பல இழப்பையும் சந்திக்கும் கர்ணன், உரிமையை மீட்டு தன் மக்களுக்கு தந்தானா? இல்லையா? இறுதியில் வென்றது சாதியா? அல்லது உரிமையா? என்பது தான், கர்ணனின் மீதி கதை.


Post a Comment

CAPTCHA
Refresh

*