By April 10, 20210 CommentsReport

லொஸ்லியாவின் ஜொலிக்கும் அழகுக்கு வனிதா சொன்ன இந்த டிப்ஸ் தான் காரணமாம்!

நடிகை வனிதா சில அழகுக் குறிப்புகளை வெளியிட்டதோடு, லொஸ்லியாவின் முகப்பருவிற்கு கூறிய டிப்ஸினையும் இங்கு கூறியுள்ளர்.

 

என்னதான் பல சர்ச்சைகளில் ஈடுபட்டு வந்தாலும் வனிதா தனது ரசிகர் பட்டாளத்திற்கு வித்தியசமான முறையில் ஏதாவது கொடுப்பதுடன், தக்கவைத்தும் கொள்கின்றார்.

 

மேலும் தனது பெயரில் புதிய சேனல் ஒன்றினை ஆரம்பித்து பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றார்.

 

அந்த வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகப்பருக்கள் மற்றும் முகத்தில் ஏற்படும் வடுக்கள் நீக்குவதற்கான எளிமையான டிப்ஸ் ஒன்றைப் பகிர்ந்ததோடு, இது லாஸ்லியாவுக்கு மிகவும் உபயோகமாகவும் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

 

இளம் வயதினர் மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் முகப்பரு என்பது பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகின்றது. தற்போது முகப்பரு ஏற்படுவதை தவிர்க்கவும், அவ்வாறு முகப்பரும் தழும்புகளாக மாறுவதை எவ்வாறு தவிர்ப்பது என்பதை இங்கு காணலாம்.

 

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது நான் லாஸ்லியாவுக்கு கொடுத்த டிப்ஸ் இதுதான். நன்கு உபயோகமாக இருந்தது எனக்கூறி எனக்கு நன்றியும் கூறியுள்ளார் என்று வனிதா எளிய குறிப்பினை தற்போது பகிர்ந்துள்ளார்.

 

நன்கு சுத்தமான மிக்சி ஜாரில் ஃப்ரெஷ் புதினா இலைகளை அரைத்து, முகத்தில் அப்லை செய்யவேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் அல்லது பன்னீர் சேர்த்துக்கொள்ளலாம்.

 

ஆனால், இதனை நீங்களே முகத்தில் தடவாதீர்கள். நிச்சயம் வேறு யாராவதுதான் அப்லை செய்யவேண்டும். முகம் முழுவதும் அப்லை செய்து, அரைமணிநேரம் தூங்கினாலும் பரவாயில்லை. ஆனால், ஓய்வு முக்கியம். பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம்.

 

இரண்டு நாளுக்கு ஒருமுறை இதுபோன்று செய்யும்போது, நிச்சயம் பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் வடுக்களும் மறையும். பருக்கள் இருப்பவர்கள் நிச்சயம் சர்க்கரைக் கலந்த இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது என்றும் கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*