By April 16, 20210 CommentsReport

ஆட்டத்தில் அனல் பறக்க விட்ட சஞ்சு சாம்சனை பாராட்டி ட்வீட் செய்த மோகன்லால்.. அவர் கூறிய பதில் என்ன?

ஐ.பி.எல் ராஜஸ்தான் அணியில் இந்த ஆண்டு சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், இந்த சீசனில் ராஜஸ்தான் அணி, தங்களது முதல் போட்டியில் நேற்று பஞ்சாப் அணியுடன் மோதிய நிலையில், 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.

 

ஆனாலும், போட்டியின் போது இறுதிவரை போராடிய கேப்டன் சஞ்சும் சாம்சன் கடைந்தி பந்தில் கேட்ச் கொடுத்து தோல்வியை தழுவினார்.

 

இருந்தாலும், சதம் அடித்து இறுதிவரை அணிக்காக போராடிய இவரை பல பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

 

அந்த வகையில், மலையாள நடிகர் மோகன்லாலும், சாம்சனை வாழ்த்து ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘டியர் சஞ்சு சாம்சன், நீங்கள் அனுப்பிய ஜெர்சிக்கு நன்றி. உங்களது தலைமையில் ஆடும் ராஜஸ்தான் அணி, இந்த சீசனில் அதிக வெற்றிகளை பெறட்டும்.

 

உங்களது அணிக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். அதற்கு, பதிலளித்த, சஞ்ச சாம்சன் ‘தேங்க் யூ லாலேட்டா’ என குறிப்பிட்டுள்ளார். இந்த இரு பதிவும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 

 


Post a Comment

CAPTCHA
Refresh

*