By April 16, 20210 CommentsReport

சமுத்திரக்கனியின் மனைவியாக வனிதா? நான் ஏன் சம்மதித்தேன் தெரியுமா?

பிக் பாஸ் புகழ் வனிதா அந்தகன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்

 

அவர் தற்போது அந்தகன் படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டு வருகிறார். சமுத்திரக்கனியின் மனைவியாக வனிதா விஜயகுமார் நடித்துக் கொண்டிருக்கிறார்.

 

படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் மேக்கப் போட்டபோது அதை தன் யூடியூப் சேனலில் லைவாக காட்டினார் வனிதா. இந்த கோடை காலத்தில் மேக்கப் போடுவது எவ்வளவு கஷ்டம் என்பதை விவரித்தார்.

 

அந்தகன் படத்தில் வனிதாவுக்கு நெகட்டிவ் கதாபாத்திரமாம். இந்நிலையில் அந்தகன் பற்றி வனிதா கூறியதாவது, அந்தகன் படத்தில் நடிக்குமாறு என்னை கேட்ட பிறகே அந்தாதுன் படத்தை பார்த்தேன்.

 

அற்புதமாக திரைக்கதைக்காக தான் அந்த படத்தில் நடிக்க விரும்பினேன். அந்தகன் படத்தில் நடிப்பதை கௌரவமாக நினைக்கிறேன்.

 

எனக்கு தியாகராஜன் அங்கிளை சின்ன பிள்ளையில் இருந்து தெரியும். அவர் இயக்கத்தில் நடிப்பது நன்றாக இருக்கிறது. இந்தியில் நடித்த நடிகை போன்றே நடிக்காமல் ஒரிஜினலாக இருக்க விரும்புகிறேன். அதனால் என் மனம் சொல்வதை கேட்டு நடிக்கிறேன் என்றார்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையில் கவனம் செலுத்தி வந்தார் வனிதா. இந்நிலையில் தான் அவரை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது.

 

ஆதம் தாசன் இயக்கத்தில் அனல் காற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் அது. மேலும் ஹரி நாடார் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் 2கே அழகானது காதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் வனிதா.

 

இது தவிர வசந்தபாலன் இயக்கத்தில் கைதி படம் புகழ் அர்ஜுன் தாஸ் நடித்து வரும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வனிதா. அவர் இப்படி படங்களில் பிசியாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.


Post a Comment

CAPTCHA
Refresh

*