By April 16, 20210 CommentsReport

நடிகர் சூரி டுவிட்டரில் வெளியிட்ட புகைப்படம்… புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி கொமடி நடிகராக வலம் வரும் சூரி அட்டகாசமான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு, தமிழ்புத்தாண்டு மற்றும் ரம்ஜான் முதல் நோன்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

காமெடி நடிகர் என்றால் அதே உடல்வாகுடன்தான் இருக்கவேண்டும் என்ற மாயையை உடைத்தவர் சூரி. சீமராஜா படத்தில் சிக்ஸ்பேக் வைத்து தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் வைத்த முதல் காமெடி நடிகர் என்ற பெருமையைப் பெற்றதோடு, வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார்.

 

இவரை மக்களிடத்தில் அதிகமாக கொண்டு சென்ற கொமடி என்னவென்றால், அது பரோட்டா கொமடி தான். இந்த காட்சியில் நடித்த பின்பே பரோட்டா சூரி என்ற பெயரினைப் பெற்றார்.

 

எதிலும் வித்தியாசத்தை கடைபிடிக்கும் நடிகர் சூரி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் பாராட்டினைப் பெற்று வருகின்றது.

 

ஆம் இன்று தமிழ் புத்தாண்டு மட்டுமின்றி, ரம்ஜான் முதல் நோன்பு நாள் என்பதால், இந்து மற்றும் முஸ்லீம் சிறுவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு, அன்பு தமிழ் உறவுகளுக்கு எனது இனிய “தமிழ் புத்தாண்டு” மற்றும் “ரம்ஜான் முதல் நோன்பு” நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*