By April 22, 20210 CommentsReport

கடைசியாக நடிகர் விவேக் போனில் பேசியது இதுதான்! கொட்டாச்சி வெளியிட்ட உருக்கமான தகவல்

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மரணமடைந்த விஷயம் இன்று வரையில் ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் சோகத்திலேயே ஆழ்த்தி இருக்கிறது.

 

மேலும், இவருடன் பணியாற்றிய நினைவுகளை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், கடைசியாக தனக்கு செய்த போன் காலை பற்றி நடிகர் கொட்டாச்சியும் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

 

அதில், நீ அனுப்பியது ஓப்பன் ஆகலை.. அப்புறும் குறும்படத்தை யூடியூப்பில் கண்டேன். ரொம்பவும் உருக்கமாகவும் இருந்தது கொட்டாச்சி.

 

இது எல்லோருக்கும் வரக்கூடிய கஷ்டம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லெவலில் கஷ்டம் இருக்கும். உலகம் முழுக்க எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும், இயற்கை நம்மேல் கருணை வைத்து சீக்கிரமாக இதை சரி செய்து மறுபடியும் நமக்கு படப்பிடிப்பு ஆரம்பித்து எல்லோரும் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.

 

ஆனா, இந்த ஆறு மாத காலம் மனதுக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்தி உள்ளது. எப்படி என்றால் பழைய நண்பர்களை எல்லாம் மீண்டும், அழைத்து நம்மோடு சேர்த்து வைத்து வேலை கொடுக்க வேண்டும் என்ற நினைப்பு என் மனதில் ஏற்பட்டு உள்ளது.

 

அதுக்கு, உன்னுடைய குறும்படம் எனக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது. அது நிச்சயம் நான் செய்வேன். உனக்கும் உன் குடும்பத்துக்கும் உன்னுடைய பொண்ணுக்கும் என்னுடைய வணக்கங்கள் வாழ்த்துக்கள் என்று அந்த போன் காலில் விவேக் கூறியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.    


Post a Comment

CAPTCHA
Refresh

*