By April 23, 20210 CommentsReport

பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் திருமணம்- குவியும் பிரபலங்களிம் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமணம் சென்னையில் நடைப்பெற்றது.

 

முன்னணி நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் – ஷீலா தம்பதியினருக்கு ஐஸ்வர்யா என்ற மகளும், ஆதித்யா பாஸ்கர் என்ற மகனும் இருக்கிறார்கள்.

 

விஸ்காம் படித்துள்ள ஐஸ்வர்யாவுக்கும், தொழிலதிபர் என்.ஏ.சுதாகரின் மகன் அகுல் சுதாகரும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

 

இந்நிலையில், ஐஸ்வர்யா – அகுல் சுதாகர் இருவரின் திருமண வரவேற்பு (ஏப்ரல் 21) மாலை நடைபெற்றது, இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

 

நடிகர்கள் சரத்குமார், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, டி.ராஜேந்தர், நாசர், ராதாரவி, அருண்விஜய், ஆனந்தராஜ், பிரசன்னா, பரத், மனோபாலா, இளவரசு, மயில்சாமி, ரமேஷ் கண்ணா, கருணாஸ், ஆர்.பாண்டியராஜன், சூரி, நடிகைகள் சினேகா, தேவதர்ஷினி,

 

குட்டிபத்மினி, சந்தியா, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், வி.சேகர், சித்ரா லட்சுமணன், ஆர்.பாண்டிராஜ், மோகன்ராஜா, தயாரிப்பாளர் எடிட்டர் மோகன், டி.சிவா, தனஞ்செயன், இசையமைப்பாளர் தேவா, பாடகர் மனோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

 

இவரது மகன் ஆதித்யா பாஸ்கர் 96 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*