By April 29, 20210 CommentsReport

மாஸ் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா… கவலையில் ரசிகர்கள்

தெலுங்கு திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் அல்லு அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தினை வைத்திருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளதை அடுத்து நான் வழிகாட்டு நெறிமுறையின்படி வீட்டிலேயே என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்.

 

மேலும் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படியும் அனைவரும் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

 

அதேபோல் எனது ரசிகர்கள் யாரும் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். நான் மிகவும் நலமுடன் தான் இருக்கிறேன், எனக்கு எந்தவித ஆபத்தும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

 

அல்லு அர்ஜூனனுக்கு கொரோனா பாதிப்பு என்பதை அறிந்த அவரது ரசிகர்கள் சோகமாக இருந்தாலும் அவர் நலமுடன் இருப்பதை அறிந்து ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*