By April 29, 20210 CommentsReport

ஹீரோவாகும் ரம்யா பாண்டியனின் சகோதரர்! உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. 

 

 ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

 

 இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ரம்யா பாண்டியனை பார்க்க அவரது அம்மா மற்றும் சகோதரர் பரசு பாண்டியன் வந்தார்கள் என்பதும் ரம்யா பாண்டியன் சகோதரர் அனைவரிடமும் ஜாலியாக சிரித்துப் பேசினார் என்பதும் தெரிந்ததே.

 

 குறிப்பாக ஆரியுடன் அவர் காட்டிய நெருக்கம் ரசிகர்களை கவர்ந்தது இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் சகோதரர் பரசு பாண்டியன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் நடிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  


Post a Comment

CAPTCHA
Refresh

*