By April 30, 20210 CommentsReport

ஒற்றை மத பதிவால் யுவன் சங்கர் ராஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்- இறுதியாக அவர் கொடுத்த பதிலடி!

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, சமூக வலைதளத்தில் இஸ்லாம் மதம் குறித்து எதார்த்தமாக போட்ட பதிவால், பல்வேறு சர்ச்சைகள் எழுந்த விஷயம் வைரலாகி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. யுவன் ஷங்கர் ராஜா 2014ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

 

மேலும், அப்துல் காலிக் என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் 2015-ம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

 

இவர்களுக்கு 2016ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே, யுவன் குரான் வசனம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

 

இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், யுவன் சங்கர் ராஜா, இந்தப் பதிவின் வாயிலாக மதப் பிரச்சாரம் செய்வதாக கமெண்ட் செய்திருந்தார்.

 

அந்த ரசிகர் போட்ட கமெண்டில், “நான் உங்களை விரும்பியதும், பின்தொடர்வதும் நீங்கள் யுவன் சங்கர் ராஜாவாக பிறந்ததால் தான். மதத்தை பரப்பும் தளம் இது இல்லை. இப்படியே தொடர்ந்தால் உங்கள் பக்கத்திலிருந்து வெளியேறிவிடுவேன்” என்று சொல்லி இருந்தார்.

 

இதற்கு யுவன்சங்கர் ராஜா, வெளியேறிவிடுங்கள் என்று பதிலடி கொடுத்தார்.

 

மேலும், சிலர் ஒருபடி மேலே சென்று குரான் கூறும் நல்ல கருத்துக்களை தான், பகவத் கீதை மாறும் பைபிள் கூறுகிறது அதை நீங்கள் பார்க்கவில்லையா என கேட்டதற்கு?

 

அதற்கு யுவன், நான் நம்பும், பின்பற்றும் ஒரு மதம் குறித்து பதிவு செய்வது எப்படி இன்னொரு மதத்தை மதிக்காமல் போவதாகும் என்றும் நாங்களும் தனிமனிதர்கள் தான் என்றும் எங்களுக்கும் உரிமைகள் உள்ளன என்றும், என் நம்பிக்கை என் உரிமை என பதிலளித்துள்ளார்.

 

மற்றொரு நபர் “புதிய மதத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நீங்கள் இன்னும் ஏன் பழைய பெயரையே பயன்படுத்துகிறீர்கள். உங்கள் பெயரை மாற்றுங்கள்” என்று கமெண்ட் செய்யதார்.

 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக யுவன் பதிவிட்டதாவது, “நான் உங்களுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு இந்தியன். நான் ஒரு தமிழன். நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியர்கள் அரேபிய நாடுகளில் மட்டும் தான் இருக்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை.

 

மதமும் இனமும் வெவ்வேறானவை. தேசியமும் மதமும் வெவ்வேறானவை. இந்த அடிப்படை விஷயம் கூட உங்களுக்கு புரியவில்லை என்றால் எதுவும் புரியாது. வெறுப்பு பிரசாரத்தை நிறுத்துங்கள். உங்கள் மீது அமைதி நிலவட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

யுவன் சங்கர் ராஜாவின் இந்தப் பதிவும், கமெண்ட்டுகளும், விளக்கங்களும் தற்போது ஸ்கிரீன்ஷாட்டுகளாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.  


Post a Comment

CAPTCHA
Refresh

*