தோல்விக்கு பின் கமல் போட்ட முதல் ட்வீட் – அந்த மனசு இருக்கே.. கொண்டாடும் ரசிகர்கள்

தமிழக சட்டசபை தேர்தலில், திமுக – அதிமுக.,விற்கு இடையே கடும் போட்டி காலையில் இருந்து நிலவி வந்தது.

 

இதனிடையே, மூன்றாவது அணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி. இந்த தேர்தலில் கமலின் கட்சி குறிப்பிட்ட இடங்களை அள்ளும், கோவை தெற்கு தொகுதியில் கமலுக்கு வெற்ற வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டது.

 

மேலும், இறுதிவரை போராடி வந்த கமலுக்கு கடைசி நிமிடத்தில் பாஜக.,வின் வானதி சீனிவாசனிடம் 1500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால், ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

 

ட்விட்டர் டிரெண்டிங்கிலும் கமல் இந்திய அளவில் முதலிடம் பிடித்தார். மேலும், கோவை மக்களை திட்டியும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்த நிலையில், தோல்வியை குறித்து எந்த பதிலும் அளிக்காமல், வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

அதில், பெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கிறீர்கள்.

 

சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துசெல்ல என் வாழ்த்துக்கள் எனக் கூறியுள்ளார். 

 

 


Post a Comment

CAPTCHA
Refresh

*