மருத்துவமனையில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி முதல் சீசன் மற்றும் கலக்கப்போவது யார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

 

அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான ஆரி குறித்து விமர்சித்தும், அவரை கார்னர் செய்தும் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

 

இதனால் சமூக வலைதளங்களில் விஷப் பாட்டீல், பாய்சன், நரி, தேள் என கன்னாபின்னாவென திட்டி தீர்த்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத ரம்யா பாண்டியன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வந்தார்.

 

இதனை தொடர்ந்து சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மென்ட் தாயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வாணி போஜனும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது, நடிகை ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரி திவ்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதனை பார்த்த ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் ரம்யா பாண்டியன் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*