தொழிலதிபரை திருமணம் செய்யவிருக்கும் அனுஷ்கா.. குஷியில் ரசிகர்கள்

பிரபல நடிகை அனுஷ்காவின் திருமணம் விரைவில் நடக்கவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் குஷியில் காணப்படுகின்றனர்.

 

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை அனுஷ்கா, 1981ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பிறந்தார். தற்போது இவருக்கு 39 வயதாகும் நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகின்றார்.

 

தற்போது இந்த ஆண்டு முடிவிற்குள் திருமணம் செய்துவைப்பதற்கு பெற்றோர்கள் ஏற்பாடுகள் தீவிரமாக செய்து வருவதாகவும், நடிகை அனுஷ்கா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

சமீபத்தில் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பிரபாஸிற்கும் இவருக்கும் காதல் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இருவரும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

 

தற்போது துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் நடிகை அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும், விரைவில் எளிமையான முறையில் திருமணமும் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

நடிகை அனுஷ்காவின் இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், நடிகை அனுஷ்காவை விட மணமகனின் வயது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகின்றது. ஆனால், இது தொடர்பாக நடிகை அனுஷ்கா தரப்பில் இதுவரை உறுதியான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*