விரைவில் சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்! தீபாவளிக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

 

கொரோனா ஊரடங்கு, கொரோனாவால் படக்குழுவினர் பாதிப்பு என பல தடைகளை கடந்து நடைபெற்று வரும் அண்ணாத்த படப்பிடிப்பை மே 10-ம் தேதிக்குள் முடிக்கவுள்ளனர்.

 

அதில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் இன்னும் ஒரிரு நாட்களில் படமாக்கப்பட்டுவிடும் என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது.

 

இதனால் இந்த வார இறுதியில் ரஜினிகாந்த் சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதேவேளை, அண்ணாத்த படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


Post a Comment

CAPTCHA
Refresh

*