நடிகர் சத்யராஜின் தங்கை வீட்டுக்குள் புகுந்த காட்டு யானைகள்! பகீர் புகைப்படங்கள்

பிரபல தமிழ் நடிகரான சத்யராஜின் தங்கை கல்பனா, நீலகிரி மாவட்டத்தின் குன்னுரில் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.

 

பாலமலை பகுதி காட்டுப்பகுதி என்பதால் வன விலங்குகளின் நடமாட்டம் இருக்கும், அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் காட்டு விலங்குகள் நுழைவது வழக்கமான ஒன்று தான்.

 

தற்போது கோடை காலம் என்பதால் சுமார் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடிகர் சத்யராஜின் தங்கை வீட்டுக்குள் நுழைந்தன.

 

இதைப்பார்த்ததும் வீட்டில் வேலை செய்தவர்கள் அலறியடித்து ஓடி ஒளிந்துள்ளனர், ஆனால் யானைகளோ மிக சந்தோஷமாக சுற்றித் திரிந்து அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் நீர் அருந்து விட்டு சென்றுள்ளது.

 

நல்லவேளையாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையாம், இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*