கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிம்ரன் வெளியிட்ட தகவல்… என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

 

நேற்று தமிழகத்தில் மட்டும் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திரையுலக பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தடுப்பூசியின் அவசியத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் அஜித் விஜய் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை சிம்ரன் தற்போது முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

நடிகை சிம்ரன் கூறுகையில்,  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக நோய்த்தொற்று பாதிக்கப்படாமல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

மேலும் குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கு தடுப்பூசி சிறந்த வழி. எனக்கு முதல் தடுப்பூசி கிடைத்ததால் நான் போட்டுக் கொண்டேன்.

 

அதே போல் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் தயவுசெய்து உடனடியாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga)


Post a Comment

CAPTCHA
Refresh

*