நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கணவரை விட இத்தனை மடங்கு அதிகமாம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

 

கடந்த 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சமந்தா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக வலம்வருவதுடன் பல வெற்றிப்படங்களையும் கொடுத்து வருகின்றார்.

 

பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

 

கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார்.

 

இந்நிலையில், சமந்தா – நாக சைதன்யா தம்பதியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இத்தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.122 கோடி என்று கூறப்பட்டுள்ளது.

 

இதில் சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.84 கோடி என்றும், நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு ரூ.38 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 


Post a Comment

CAPTCHA
Refresh

*