ஹிந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா – ஆனால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அதிரடி விலகல்

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’.

 

ரசிகர்கள் மத்தியில் பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டனர். மாதவனாக சயீப் அலிகானும், விஜய் சேதுபதியாக அமீர் கானும் நடிப்பதாக இருந்தது.

 

பின்னர் அமீர் கான் இப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் இப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

 

ஆனால் தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன், கொரோனா பரவல் குறைந்ததும் தொடர்ந்து பைட்டர், கிரிஷ் 4 உள்ளிட்ட படங்களில் நடிக்க கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளார்.

 

இதனால் விக்ரம் வேதா ரீமேக்கிற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதால், அவர் இப்படத்தில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த தகவல் ஹிருத்திக் ரோஷனின் ரசிகர்களுக்கு பெரும் ஷாக்கிங்காக அமைத்துள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*