இயற்கை 2 உருவாக இருந்தது – ஆனால், இப்படி நடந்து விட்டது

ஷாம், அருண்விஜய் நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் இயற்கை.

 

இப்படத்தை தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கினார்.

 

தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி முடித்த எஸ்.பி.ஜனநாதன், கடந்த மார்ச் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

 

இந்நிலையில் லாபம் படத்தை முடித்த பின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், இயற்கை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருந்தாராம்.

 

மேலும் அப்படத்தை நார்வே அல்லது பிஜி நாட்டில் படமாக்க அவர் தன்னிடம் ஆலோசித்து வந்ததாகவும் நடிகர் ஷாம் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

 

எஸ்.பி.ஜனநாதனின் மறைவால் அப்படம் கைகூடாமல் போய்விட்டதாக ஷியாம் கூறியுள்ளார்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*