தொடர்ந்து ஓடிடி-யில் வெளியாகும் தனுஷின் இரண்டு திரைப்படம் – என்னென்ன தெரியுமா

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் கர்ணன்.

 

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், கர்ணன் படம் இரண்டு வாரம் மட்டுமே திரையில் ஓடியது.

 

இதனால் இப்படம் வரும் மே 14 முதல் ஓடிடியில் கர்ணன் திரைப்படம் வெளியாக விருக்கிறது. இதற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.

 

இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படமும் வருகிற ஜூன் மாதம் 18ஆம் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது.

 

தொடர்ந்து இரு திரைப்படங்கள் ஓடிடி-யில் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*