மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? கொரோனாவால் வெளியிட்டில் வந்த மாற்றம்

நடிகர் STR தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார், அந்த வகையில் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து முடித்துள்ள நிலையில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே இப்படத்தில் மீதம் உள்ளதாம்.

 

  இதனிடையே இப்படத்தின் டப்பிங் பணிகள் அண்மையில் தொடங்கியது அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியிருந்தது.

 

இந்நிலையில் இம்மாதம் வெளியாகவிருந்த மாநாடு திரைப்படம் கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் தற்போது படக்குழுவினர் மாநாடு படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அப்போதும் பரவல் தீவிரமாக இருந்தால் ரிலீஸ் தள்ளி வைக்கப்படும் என கூறப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*