மீனாவுக்கு அடித்த ஜாக்பாட்! 60 வயதானாலும் இன்னும் இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் அளவு இருக்கிறாரே!

கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடிக்கும் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மீனாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

 

மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிப்பாராம். 60 வயதானாலும் இன்னும் இளம் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா.

 

அவரின் புதுப்படங்கள் குறித்து அறிவிப்பு வெளியானால் ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். இந்நிலையில் தான் அவர் கோபிசந்த் இயக்கத்தில் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். இரண்டு கதாபாத்திரங்களுக்கான லுக்கை தயார் செய்து கொண்டிருக்கிறார்களாம்.

 

அதில் ஒரு பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மற்றொரு பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீனா நடிக்கிறாராம்.

 

மீனாவின் கதாபாத்திரம் ஃபிளாஷ்பேக்கில் வருமாம். இருப்பினும் வெயிட்டான கதாபாத்திரம் என்பதால் மீனா அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

 

முன்னதாக பாலகிருஷ்ணாவும், மீனாவும் சேர்ந்து முத்துல மொகுடு, பாபிலி சிம்ஹம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். அந்த பழைய மேஜிக்கை கோபிசந்த் படத்திலும் கொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 


Post a Comment

CAPTCHA
Refresh

*