நேரடியாக ஓடிடியில் களமிறங்கும் வைபவ் மற்றும் வாணி போஜனின் படம் – ரிலீஸ் தேதியுடன் வெளியான அறிவிப்பு

அபியும் நானும், மொழி, பயணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி வந்தவர் இயக்குனர் ராதா மோகன்.

 

இவர் இயக்கத்தில் தற்போது , ‘மலேஷியா டூ அம்னீஷியா’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.

 

இப்படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.

 

இந்நிலையில், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

அதன்படி ‘மலேஷியா டூ அம்னீஷியா’ திரைப்படம் வருகிற மே 28-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்குமுன் நடிகர் வைபவ்வும், நடிகை வாணி போஜனும் இணைந்து நடித்த ‘லாக்கப்’ படமும் ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.    


Post a Comment

CAPTCHA
Refresh

*