திருமணம் எனும் தவறான முடிவை எடுக்க மாட்டேன் – சிம்பு பட நடிகை ஷாக்கிங் பேட்டி

தமிழ் சிம்பு நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை அப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சார்மி.

 

இதன்பின் ‘லாடம்’ ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற படங்களில் நடித்துள்ள சார்மி தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார்.

 

தற்போது பெரிதும் பட வாய்ப்புகள இல்லாத நிலையில் தயாரிப்பாளராக களமிறங்கி இருக்கிறார் நடிகை சார்மி. ஆம் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ‘லிகர்’ படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த சில நாட்களாக, நடிகை சார்மி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி பரவியது.

 

இதுகுறித்து நடிகை சார்மி கூறியதாவது: ” தற்போது எனது வேலையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவை எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன்.

 

போலியாக எழுதுபவர்கள், வதந்திகள் ஆகியவற்றுக்கு குட் பை, சுவாரஸ்யமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்கள் ” என தெரிவித்துள்ளார்.

 

சார்மியின் ரசிகர்களுக்கு இது ஷாக்கிங் தகவலாக தற்போது பரவி வருகிறது.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*