சினிமாவில் கம்பீரமாக நடித்த நெப்போலியன்… இந்த மனிதருக்குள் இவ்வளவு கஷ்டங்களா? கண்ணீர் கதை இதோ

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வில்லன் என்றால் அனைவரின் ஞாகத்திற்கு வருபவர் தான் நடிகர் நெப்போலியன்.

 

அந்த அளவிற்கு தனது உடலமைப்பினையும், கம்பீரத்தையும் கொண்டுள்ளவர். பின்பு ஹீரோ மற்றும் குணச்சித்ர வேடத்தில் நடித்து ரசிகர்களின் பட்டாளத்தினை அதிகமாக கவர்ந்தவர்.

 

அதிலும் தசாவதாரம் படத்தில் இவர் “வாய்ப்பேச்சில் வைனவர்” தான் எனக் கூறும் வசனம் எல்லாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

 

தெலுங்கு ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த இவரது இயற்பெயர் குமரேசன். ஆனால் பாரதிராஜா நெப்போலியனை சினிமாவிற்கு அழைத்து வரும்போது குமரேசன் என்ற பெயரை மாற்றி நெப்போலியன் என்ற பெயர் வைத்துள்ளார்.

 

அப்போது நெப்போலியனுக்கு இந்த பெயர் பிடிக்காமல், தனது பெயரை ஸ்டைலாக மாற்றுமாறு பாரதிராஜாவி்டம் கேட்டுள்ளார். இதற்கு பாரதிராஜா உனக்கு இந்த பெயர்தான் சரியாக இருக்கும் என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.

 

நெப்போலியனின் பெரிய பையன் தனுஷ் சிறுவயதில் மஸ்குலர் டிராபி என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது உடம்பிலுள்ள தசைகள் ஆங்காங்கு செயல்படாமல் இருப்பதே இந்த நோயாகும். இதற்காக அமெரிக்காவில் ட்ரீட்மெண்ட் எடுக்க சென்றுள்ளார்.

 

பின்பு அப்படியே அமெரிக்காவில் வீடு வாங்கி செட்டிலாகிய நெப்போலியன், ஜீவன் டெக்னாலஜி என்ற ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருவதுடன் இதில் 800க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

 

இவர் தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏ என திமுகவின் அனைத்து பதவிகளையும் வகித்தவர். தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*