பாலிவுட்டில் களமிறங்கும் நடிகை சாய் பல்லவி? அதுவும் ரீமேக் படத்திலா

ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

 

தொடர்ந்து தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

 

இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

 

இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘சத்ரபதி’ என்ற படத்தை தற்போது இந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளனர்.

 

இதில் நாயகனாக தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்க, வி.வி.விநாயக் இப்படத்தை இயக்க உள்ளார்.

 

இந்த படத்தில் சாய் பல்லவியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

 

இதில் நடிக்க சாய் பல்லவி ஓகே சொல்லிவிட்டால், அவர் தமிழ், தெலுங்கு, மலையாளத்தை தொடர்ந்து இந்தியிலும் கால்பதித்து விடுவார். 


Post a Comment

CAPTCHA
Refresh

*