D43 படத்தில் நடிகர் தனுஷ் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம், இயக்குனர் கூறிய சூப்பர் தகவல்!

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றியடைந்து வருகிறது.

 

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் மிக சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்துள்ளது. 

 

இந்நிலையில் தனுஷ் The Gray Man என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தை முடித்துவிட்டு D43 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் தற்போது அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன், D43 குறித்த சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார். 

 

ஆம் அப்படத்தில் தனுஷ் விசாரணை பத்திரிகையாளராக நடிப்பதாகவும், கமர்சியல் மற்றும் தில்லர் படமாக D43 இருக்கும் எனவும் கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*