சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம், உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளியில் வெளியான திரைப்படம் தான் சூரரை போற்று.

 

மேலும் பிரபல OTT தளத்தில் நேரடியாக வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.   

 

இந்நிலையில், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, வருகிற ஜுன் 11 ம் தேதி துவங்கி 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

 

மேலும் கொரோனா பரவல் காலம் என்பதால், ஷாங்காய் திரைப்பட விழா இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*