நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கிய கொரோனா நிதி எவ்வளவு தெரியுமா? கொண்டாடும் ரசிகர்கள்

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை பயங்கரமாக தாக்கிவரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகின்றது.

 

இதனிடையே கொரோனாவை கட்டுப்பட்டுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

இதனையடுத்து தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், சிறுவர்கள் என பல தரப்பினரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

 

இந்நிலையில் பிரபல ரிவியில் தொகுப்பாளராக இருந்து தற்போது சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இதே போல் ஜெயம் ரவி, இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன் தலா 10 லட்சம் ரூபாயும் நிதியுதவி அளித்துள்ளனர். 


Post a Comment

CAPTCHA
Refresh

*