தமிழர் ஒருவரை தான் திருமணம் செய்வேன்! நடிகை ராஷ்மிகாவின் ஆசை

தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள ராஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் மூலம் அறிமுகமானார்.

 

தனது திறமையான நடிப்பு, கியூட் ரியாக்ஷன்ஸ், அழகு, அளவான கவர்ச்சி என அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென தனி இடத்தை உருவாக்கி விட்டார்.

 

இந்நிலையில், அண்மையில் தனது திருமணம் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள இவர், “தமிழ் கலாச்சாரமும், அதன் பாரம்பரியமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. குறிப்பாக இங்குள்ள உணவை அதிகமாக விரும்புகிறேன்.

 

தமிழர் ஒருவரை திருமணம் செய்து நிச்சயம் ஒருநாள் தமிழ்நாட்டு மருமகளாவேன்” என தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று பிரிந்தவர் என்பதும் குறிப்பித்தக்கது. 


Post a Comment

CAPTCHA
Refresh

*