கர்ணன் படத்தை கண்டு வியந்த பிரபல பாலிவுட் இயக்குனர், நடிகர் தனுஷ் குறித்து அவர் என்ன கூறியுள்ளார் பாருங்க

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் இருப்பவர். இவரின் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான கர்ணன், பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

 

மேலும் சமீபத்தில் இப்படம் OTT யில் வெளியாகியிருந்தது, இதனால் தற்போது பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் கர்ணன் படம் குறித்து பதிவிட்டுள்ளார். “அற்புதம், அட்டகாசம். ‘கர்ணன்’ என்கிற அனுபவத்தை இப்படித்தான் விவரிக்க முடியும். மாரி செல்வராஜ், என்னே ஒரு கதைசொல்லி நீங்கள், உங்கள் எண்ணங்களை திரையில் நீங்கள் தீட்டிய விதத்துக்கு உங்களை வணங்குகிறேன். 

 

தனுஷ், நீங்கள் ஒரு மாயவித்தைக்காரர். அதை நீங்கள் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். நான் உங்களை நடிகர் என்று நினைத்தேன்” என்று ஆனந்த் எல்.ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*