நடிகை காஜல் அகர்வாலின் நடிப்பில் இத்தனை திரைப்படங்கள் வெளியாகாமலே உள்ளதா! அதிர்ச்சியளிக்கும் விவரம்

நடிகை காஜல் அகர்வால் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர், இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

 

இவர் நடிப்பில் கடைசியாக கோமாளி திரைப்படம் வெளியானது, ஆனால் அப்படத்தை இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வெளியாகாமலே உள்ளது.

 

* இவரின் பாரிஸ் பாரிஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தணிக்கை குழு சர்ச்சையில் சிக்கி நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.

 

* ஹேய் சினாமிகா என்ற படத்தில் நடித்தபோது காஜலுக்கு திருமணம் முடிந்தது. திருமணத்துக்கு பிறகு பாக்கி இருந்த அந்த படத்தின் காட்சிகளை நடித்து முடித்து விட்டார். இருப்பினும் அதுவும் கொரோனாவால் ரிலீசாகாமல் உள்ளது.

 

* கமல்ஹாசன் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படம் பல குழப்பங்கள் காரணமாக பாதியில் நிற்கிறது.

 

* தெலுங்கில் த்ரிஷா நடிக்காமல் விலகிய சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில், இப்போது கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

* மேலும் 2 தமிழ் படங்களிலும் ஒரு தெலுங்கு படத்திலும் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்த நிலையில் அந்த படங்களும் சில காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*