நடிகர் விஜய்யை பேஸ் புக்-ல் இத்தனை மில்லியன் பேர் பின் தொடர்கிறார்களா? செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. 

 

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

 

அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது.

 

இந்நிலையில் தளபதி விஜய்யை பேஸ் புக்-ல் இதுவரை 7.5 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகிறாரகள். 

 

மேலும் இதன் மூலம் சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பின் தொடருவோர் எணிக்கையை வைத்துள்ள லிஸ்டில் தளபதி விஜயும் இணைந்துள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*