தளபதி 66 படத்திற்காக மீண்டும் அமையவுள்ள பிரம்மாண்ட கூட்டணி, இணையத்தில் வேகமாக பரவி வரும் தகவல்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.

 

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

 

மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் அமைத்து நாடகவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய். 

 

இந்நிலையில் தற்போதே தளபதி 66 படத்திற்கான வேலைகளை விஜய் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம், அப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும், அதனை மீண்டும் அட்லீ தான் இயக்கப்போவதாகவும் பேசப்பட்டு வருகிறது.

 

இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். 


Post a Comment

CAPTCHA
Refresh

*