பழைய நிலைக்கு முகம் சரியானது எப்படி? விளக்களித்த நடிகை ரைசா வில்சன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன்.

 

இந்நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்தார்.

 

இதையடுத்து, இவர் கடந்த மாதம் சிகிச்சைக்கு தோல் மருத்துவரிடம் சென்றதாகவும் அதனால் தனது முகத்தில் ஏற்பட்ட காயம் குறித்தும் பதிவிட்டிருந்தார். இதனால், தொடர்ந்து பல சர்ச்சைகள் நடந்தன.

 

சில நாட்களுக்கு முன் மீண்டும் முகம் சரியான அழகான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ரைசா. இந்த நிலையில், பலரும் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து கேள்விகள் எழுப்பி வந்த நிலையில் அதற்கான பதிலை தெரிவித்துள்ளார் ரைசா.

 

புதிய கிளினிக் ஒன்றிற்கு சென்றதாகவும் அங்கு எடுத்துக்கொண்ட ஐந்து வார சிகிச்சைக்கு பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

Gallery


Post a Comment

CAPTCHA
Refresh

*