அப்படி கணவர் சொன்னால் அதை நிறுத்திவிடுவேன்.. காஜல் அகர்வாலின் ஓபன் டாக்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை காஜல் அகர்வால்.

 

கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். காஜல் அகர்வால் நடித்து கடைசியாக கோமாளி படம் 2019-ல் திரைக்கு வந்தது.

 

இதையடுத்து, கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் அதிகமாக இல்லாததால் கணவருடன் ஜாலியாக சுற்றிவருகிறார்.

 

இதனிடையே, குடும்ப வாழ்க்கை என்றாகிவிட்ட நிலையில் தொடர்ந்து படம் நடிப்பீர்களா? என்ற ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அதற்கு பதிலளித்த காஜல், நான் எவ்வளவு காலம் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. என் கணவர் கௌதம், என்னுடைய சினிமா பயணத்திற்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார்.

 

அதனால் இப்போதைக்கு எந்த கவலையும் இல்லாமல் நடித்து வருகிறேன். ஒருவேளை எதிர்காலத்தில் தனது கணவர் நடிப்பை நிறுத்திவிடு என்று கூறினால் மறுப்பு தெரிவிக்காமல் உடனே நிறுத்திவிடுவேன் என்று கூறி ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளார் காஜல் அகர்வால். 


Post a Comment

CAPTCHA
Refresh

*