அடுத்ததாக ஓடிடியில் வெளியாகும் படம் – அட, இவர் நடித்த திரைப்படமா

கொரோனா தாக்கம் காரனமாக, பரவலை தடுக்க மக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் மூடப்பட்டுள்ளது.

 

அதிலும் திரையரங்கம் மூடப்பட்டதால், பல படங்கள் இதுவரை நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது.

 

ஆம் சூர்யாவின் சூரரை போற்று, பொன்மகள் வந்தால், பெங்குயின், கா/பெ. ரணசிங்கம், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களை கூறலாம்.

 

மேலும் வரும் ஜூன் மாதம் 18ஆம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படமும் ஓடிடி யில் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில், நடிகர் சாந்தனு மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இதுகுறித்து முன்னணி ஓடிடி தளத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*