இந்தியன் 2 பட கமலின் பேரனுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…. குடும்பமே கதறும் அவலம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் குழந்தை நட்சத்திரமான ஆலமின் 34 வயது தாய் யாஷிம் கொரோனாவிற்கு பலியாகி உள்ளார்.

 

ஆலம் வாழ்க்கையில் நடந்த இந்த கொடூர துயர சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது.

 

ராயபுரத்தை சேர்ந்த முபாரக்கிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர்களில் ஒருவன் தான் 10 வயதாகும் ஆலம்.

 

இவர் வலிமை படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறான்.

 

குறிப்பாக இந்தியன் 2 படத்தில் கமலின் பேரனாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மருத்துவமனை படுக்கை வசதி கிடைக்காததால், இவர்கள் அனைவரும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.

 

கொரோனா முதல் அலையிலும் இவர்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பிறகு நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

 

ஆனால் ஆலமின் தாய் கர்பிணியாக இருந்ததால் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 

அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சமயத்தில் அரசு மருத்துவமனையில் ஆலம் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததால் தாய் இறந்தது அவருக்கு தெரியாது.

 

ஆலமின் தந்தை அவரின் நண்பர்கள் சிலரின் உதவியுடன் யாஷினின் இறுதி சடங்குகளை செய்துள்ளார்.

 

இதேவேளை, இப்படியான சூழலில் ஆலமின் சம்பள பாக்கியான மூன்றரை லட்சத்தை தந்து உதவும்படி வலிமை மற்றும் இந்தியன் 2 பட தயாரிப்பாளர்களிடமும் முபாரக் உதவி கேட்டுள்ளார்.  


Post a Comment

CAPTCHA
Refresh

*