இனி திரைப்படங்களில் நடிப்பது குறித்து நடிகை திரிஷா எடுத்துள்ள அதிரடி முடிவு, என்ன காரணம் தெரியுமா?

தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை திரிஷா.

 

கடைசியாக இவர் பரமபதம் என்ற திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. 

 

மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் திரிஷா.

 

இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் நடிகை திரிஷாவிடம் சில இயக்குனர்கள் கதை சொல்ல முனைப்பு காட்டினார்களாம். 

 

ஆனால் நடிகை திரிஷா யாரிடமும் கதை கேட்கவில்லை என கூறப்படுகிறது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பின்னர் தான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என நடிகை திரிஷா முடிவு செய்துள்ளாராம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*