விஜய் வீட்டிற்கு வந்த முக்கிய பிரபலம்: டீல் ஓகேயாகிடுச்சாமே… ஒரே குஷியில் ரசிகர்கள்

மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது.

 

அடுத்த கட்ட படப்பிடிப்பை மே மாதம் சென்னையில் நடத்த முடிவு செய்தார்கள். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கவே படப்பிடிப்பை தள்ளி வைத்திருக்கிறார்கள்.

 

தளபதி 65 பட வேலையே இன்னும் முடியாத நிலையில் அடுத்ததாக தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்று கூறப்படுகிறது.

 

மேலும் தளபதி 67 படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபல்லி இயக்குகிறார், தில் ராஜு தயாரிக்கிறார் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியது.

 

என்ன சார் விஜய் அடுத்தடுத்து கமிட்டாகிவிட்டாரா என்று விசாரித்தபோது தான் உண்மை தெரிய வந்தது. விஜய் தளபதி 65 படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்

 

. அவரின் அடுத்த படங்கள் குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை. தளபதி 65 பட வேலை 50 சதவீதம் முடிந்த பிறகே அவர் அடுத்த படம் குறித்து யோசிப்பார் என்று விஜய் தரப்பில் கூறுகிறார்கள்.

 

சம்பந்தமே இல்லாமல் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது ஏன் என்று பலரும் வியக்கிறார்கள். இந்நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் வேறு விதமாக சொல்கிறார்கள். அதாவது வம்சி பைடிபல்லி ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்து விஜய்யை சந்தித்து படம் தொடர்பாக பேசியது உண்மையே.

 

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள். லோகேஷ், வம்சி மட்டும் அல்ல அடுத்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் விஜய் படம் பண்ணுகிறார் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*