16 ஆண்டுகள் நீடித்த கமலின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் பிரிந்தது மகிழ்ச்சியே! மகள் ஸ்ருதிஹாசன் அதிரடி

தன்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா டிவோர்ஸ் பெற்றது தனக்கு மகிழ்ச்சியையே கொடுத்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

 

அவர்கள் இருவரும் தங்களது வாழ்க்கையை தனித்தனியாக சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா இருவரும் கடந்த 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 16 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண வாழ்வு கடந்த 2004ல் டிவோர்சுடன் முடிந்தது.

 

இவர்கள் இருவருக்கும் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தனது பெற்றோரின் விவாகரத்து குறித்து பேசிய ஸ்ருதிஹாசன் இருவர் இணைந்து வாழ முடியாதபோது ஏதோ ஒரு காரணத்திற்காக இணைந்து இருப்பது தேவையற்றது என்று தெரிவித்துள்ளார்.

 

அவர்கள் இருவரும் தனியான பின்பு மிகவும் சந்தோஷமாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் சேர்ந்து வாழ்ந்தபோது அவர்களால் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 

அவர்கள் தங்களது வாழ்க்கையை தனியாக சிறப்பாக வாழ்ந்து வருவது குறித்து தான் மிகவும் உற்சாகமாக பீல் பண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

ஆயினும் சிறப்பான பெற்றோராக அவர்கள் இருவரும் தொடர்ந்து இருப்பதாகவும் குறிப்பாக தன்னுடைய தந்தை தன்னுடன் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் உள்ளதாகவும் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

 

தன்னுடைய தாயும் இதேபோல இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இருவரும் தனித்தனியாக மிகவும் அற்புதமானவர்கள் என்றும் சேர்ந்து இருந்தபோது அவர்களால் அவ்வாறு இருக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

மொத்தத்தில் சேர்ந்து வாழ்ந்த காலத்தை காட்டிலும் தற்போது அவர்கள் இருவரும் சந்தோஷமாக உள்ளதாக அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.  


Post a Comment

CAPTCHA
Refresh

*