மூன்றாவது முறையாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ள முன்னணி நடிகை, அதுவும் இந்த பிரம்மாண்ட படத்திலா!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.

 

மேலும் அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.

 

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

 

மேலும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் அமைத்து நாடகவிருந்தது, ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.

 

இந்நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

 

மேலும் அப்படத்தில் விஜய்க்கு 2 கதாநாயகிகள் என்றும் அதில் ஒரு நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*