நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த விஜய் சேதுபதியின் திரைப்படம் OTT-யில் வெளியீடு, எந்த திரைப்படம் தெரியுமா?

கடந்த ஆண்டு முதல் பல திரைப்படங்கள் கொரோனா காரணமாக திரையரங்கில் வெளியாகாமல் OTT தளத்தில் வெளியாகி வருகிறது.

 

மேலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களும் OTT தளத்தில் வெளியாகி வெற்றியடைந்து வருவதை பார்த்து வருகிறோம்.

 

அந்த வகையில் நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி நேரடியாக Netflix-ல் வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் கடைசி விவசாயி.

 

நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இப்படம் தற்போது நேரடியாக OTT தளம் ஒன்றில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதற்கு முன் இந்த கூட்டணியில் ஆண்டவன் கட்டளை திரைப்படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.


Post a Comment

CAPTCHA
Refresh

*