கஷ்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு உதவிய தளபதி 65 பட நடிகை, குவியும் பாராட்டுக்கள்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.

 

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

 

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி திரைப்படத்தின் அறிமுகமாகி இருந்தாலும், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குகிறார். 

 

இந்நிலையில் தற்போது நடிகை பூஜா ஹெக்டே கொரோனா காலகட்டத்தில் கஷ்டத்தில் உள்ள 100 குடும்பங்களுக்கு உதவியுள்ளார்.

 

ஆம், சுமார் 100 நடிகை பூஜா ஹெக்டே ஒரு மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களை வழங்கியுள்ளார்.

Gallery


Post a Comment

CAPTCHA
Refresh

*