ஜுன் மாதம் முழுவதும் புத்தம் புது ஷோக்களுடன் ஜீ திரை- செம கொண்டாட்டம் தான்

கொரோனா தொற்று பிரச்சனைகள் ஆரம்பித்ததில் இருந்து மக்கள் தொலைக்காட்சி பக்கம் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

 

எனவே தொலைக்காட்சிகள் மிகவும் கவனமாக மக்கள் விரும்பும் வண்ணம் புத்தம் புது ஷோக்கள், திரைப்படங்கள் என ஒளிபரப்பி வருகிறார்கள்.

 

அப்படி ஜீ திரை தொலைக்காட்சியும் தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் இப்போது ஒரு புது விஷயத்துடன் ஜுன் மாதத்தில் ஜொலிக்க உள்ளார்கள்.

 

புத்தம் புதிய ஷோக்களை களமிறக்கியுள்ளனர். சரி அப்படி அவர்கள் ஜுன் மாதத்தில் என்னென்ன புது விஷயங்கள் கொண்டு வந்துள்ளார்கள் என்ன விவரம் இதோ,

 

ஜுன் 4 மறைந்த நடிகர் எஸ்.பி.பி அவர்களின் பிறந்தநாள். அவரின் நினைவாக அன்று சங்கராபரணம் திரைப்படத்தை காலை 7 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள்.

 

ஜுன் 13, மதியம் 1 மணிக்கு மெஹந்தி சர்க்கஸ், ஜுன் 27, மதியம் 1 மணிக்கு இஞ்சி இடுப்பழகி, ஜுன் 27, மாலை 3.30 துருவங்கள் பதினாறு, ஜுன் 20, மதியம் 12 மணிக்கு ஜாக்கி சான் நடித்த Vanguard திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

 

1 மணி திரை அரங்கம் என்ற பெயரில் ஜீ திரை லாக்டவுன் ஹிட்ஸ், டோலிவுட் தமாகா, தந்தையர் தின ஸ்பெஷல், நடிகர் ஜீவா ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் வர இருக்கின்றன.

 

ஜுன் 6 முதல் தினமும் மாலை 7 மணிக்கு வாங்க பாக்கலாம் வித் அபிஷேக் குமார் என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சி வர இருக்கிறது.

 

வேல்ட் மியூசிக் தினத்தை கொண்டாடும் விதமாக ஜுன் 21 ஜீ திரையின் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சி வர இருக்கிறது.

 


Post a Comment

CAPTCHA
Refresh

*