ரோஜா சீரியலில் இருந்து திடீரென வெளியேறும் முக்கிய நடிகை- ரசிகர்கள் ஷாக்

சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ரோஜா.

 

தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டாப்பில் உள்ளது. இடையில் TRPயில் இரண்டாம் இடத்தை பிடித்த சீரியல் மீண்டும் முதல் இடத்திற்கு மாறிவிட்டது.

 

சீரியலின் முக்கியமான நீதிமன்ற காட்சிகளுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில் சீரியலில் இருந்து ஒரு நடிகை விலக இருப்பதாக செய்தி வந்துள்ளது. இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் ஷாமிலி. அண்மையில் இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்.

 

தற்போது என்னவென்றால் கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் இந்த நிலையில் கர்ப்பமாக இருப்பதால் பாதுகாப்பாக இருக்க வீட்டிலேயே இருக்க முடிவு செய்துள்ளாராம்.

 

அவரது மருத்துவரும் இதையே தான் கூறியுள்ளாராம். எனவே தற்போது ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாகவும் மீண்டும் கண்டிப்பாக நடிக்க வருவேன் என்றும் ரசிகர்களுக்கு தகவல் கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*