காமெடி நடிகர் கிங்காங் மகனா இவர்? பிறந்த நாளுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருப்பவர் தான் கிங்காங். இவரது இயற்பெயர் சங்கர்.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ‘அதிசய பிறவி’ திரைப்படத்தின் மூலமாக கோலிவுட் சினிமா உலகிற்கு அறிமுகமாகினார் கிங்காங்.

 

அதன் பின்னர், கவுண்டமணி, வடிவேலு, செந்தில் ஆகிய பல்வேறு நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருக்கின்றனர்.

 

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் 300-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.

 

மேலும், இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில், இன்று மகனுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் கிங்காங்..

 

அவருடைய புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கிங்காங், ‘என்னுடைய மகன் துரைமுருகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’ என்றுக் குறிப்பிட்டுள்ளார்.      

 


Post a Comment

CAPTCHA
Refresh

*