முதல்முறையாக வலிமை படத்தில் தல அஜித்தின் கெட்டப் குறித்து வெளியான தகவல், அப்படத்தின் நடிகை கூறியது.

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. 

 

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித். 

 

அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் அதன் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்.

 

இந்நிலையில் வலிமை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சங்கீதா அவர் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடியபோது ’வலிமை’ படத்தில் அஜித்தின் கேரக்டர் குறித்து கூறியுள்ளார்.

 

அஜித் இதற்கு முன் நடித்திராத கேரக்டரில் இந்த படத்தில் நடித்து உள்ளதாகவும், 10 முதல் 15 வயது வரை அவர் வயது குறைந்து காணப்படுவார் என்றும் அந்த அளவுக்கு அவர் இந்த படத்தில் ஸ்மார்ட்டாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.  


Post a Comment

CAPTCHA
Refresh

*